.

.
5-11-15

சவூதி அரேபியாவில் தனியார்
நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட
தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல்
ஓராண்டுக்கும் மேலாக தவித்து
வருகின்றனர். சவூதி அரேபியாவில்
உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்
இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள்
ஏராளமானோர் கட்டுமான
தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் அவர்களை அந்நிறுவனம்
வேலையை விட்டு நீக்கியதோடு
அவர்களுக்கான நிலுவை
சம்பளத்தையும் வழங்காமல் வயி்ற்றில்
அடித்துள்ளது. தங்குமிட அனுமதி
முடிவடைந்துவிட்டதால் விசா
கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட 110 இந்தியர்கள்
சவூதி அரேபியாவில் உள்ள
தொழிலாளர்களுக்கான முகாமில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்
பெரும்பாலனவர்கள் விழுப்புரம்
உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
நிலுவை சம்பளம், மற்றும் பணி
பயன்களை பிரித்து தவனை முறையில்
வழங்குவதாக கடந்த ஆண்டு உறுதி
அளித்த தனியார் நிறுவனம் அதன்படி
நடந்து கொள்ளவில்லை.
அத்துடன் அங்குள்ள இந்திய தூதரக
அதிகாரிகளுக்கு எந்த
ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை
என்று கூறப்படுகிறது. சவூதி
அரேபியாவில் தவித்து வரும் தமிழர்கள்
நாடு திரும்ப விரும்புவதாக
கூறியுள்ளனர். அதற்கான
நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய
அரசும், விரைந்து எடுக்க வேண்டும்
என்றும், நிலுவையில் உள்ள சம்பளத்தை
பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்றும் தொழிலாளர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.