"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/10/15

புது தில்லியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இதுபோன்ற சம்பவங்களைக் களைய பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுநர் நஜீப் ஜங்கும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளை சந்திக்கச் சென்ற அரவிந்த் கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது வெட்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் தில்லி காவல்துறை முற்றிலுமாக தோல்வி அடைந்து விட்டது. தற்போது பிரதமரும், ஆளுநரும் என்ன செய்யப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவமனையில் சந்திக்கப் சென்று கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.