.

.
3-11-15

துபாயில் பொது போக்குவரத்தை
பயன்படுத்தியதால் 50 கிராம் தங்கம்
வென்றார் தமிழ் பெண்மணி.
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளைப்
பயன்படுத்த பொதுமக்களை Dubai RTA
(Roads and Transport Authority) ஊக்குவித்து
வருகிறது. அதிகப்படியாக மெட்ரோ அல்லது
பேருந்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு,
ஆன்ட்ராய்டு போன், ஆப்பிள் போன், ஐபேட் என
பல்வேறு பரிசுப் பொருள்களை வழங்க்கி
அவர்களைப் பெருமைப்படுத்தியது.
இந்த முறை 30 பயணிகளைத் தேர்ந்தெடுத்து,
அவர்களுக்கு 50 கிராம் தங்கம் வழங்கிச்
சிறப்பித்துள்ளது. பரிசுபெற்ற 30 பேர்களில்
தமிழ் நாட்டைச் சார்ந்த திருமதி. சாந்தி
ராபின் என்ற பெண்மணியும் ஒருவர்
என்பது மகிழ்ச்சிக்குரியது.
திருமதி. சாந்தி, துபையில் வீட்டுப்
பணிப்பெண்ணாக இருக்கிறார்.
இவருடைய வருமானத்தை மட்டுமே குடும்பம்
நம்பியுள்ளது. மேலும் இவரின் நான்கு
பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காகவே இங்கு
பணிக்கு வந்ததாகக் கூறுகிறார்.
இந்தப் பரிசைப் பெற்றுக்
கொள்ளும் போது அவரால் அவரின்
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத்
தங்கம் எனது பிள்ளைகளின் படிப்பிற்குப் பேருதவி
புரியும் என்றும் கூறியுள்ளார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.