"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/6/17

ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி தான். அந்த மாதம் முழுவதும் ஏழையாக இருக்கட்டும் பணக்காரராக இருக்கட்டும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

பகல் முழுவதும் நோன்பிருந்தாலும் கூட முகத்தில் எந்த களைப்பும் இன்றி முக மலர்ச்சியுடன் தொழுவது குர்ஆன் ஓதுவது என்று இருப்பார்கள். வி.களத்தூரில் ரமலான் மாதம் என்றாலே மிகவும் கோலாகலமாக இருக்கும்.

தெருவுக்கு தெரு வடை, பச்சி, சம்சா, போண்டா, கடைகள் என கடைகள் தோன்றி இருக்கும்... பள்ளிகளுக்கு சிறுவர்கள் பாதி நாள் மட்டுமே போவர்கள.. சிலருக்கு அன்று விடுமுறை தான். இளம் வயதிலேயே குர்ஆன் மனனம் செய்த பெண்கள் வீடுகளிலும், ஹாபிழ்கள் பள்ளிவாசல்களிலும் தராவீஹ், வித்ரு தொழுகைகள் வைப்பார்கள்.

பள்ளிகளில் அஸர் தொழுகைக்கு பிறகு சுவையான வழங்கப்படும் நோன்புக்கஞ்சி... அதனை வாங்க டிப்பன்களை கையில் ஏந்தி நிற்கும் சிறுமிகளின் அழகு ....

ஃமக்ரிப் பிறகு வீதிகளில் சிறுவர்கள் தெருவுக்கு தெரு ஒடி விளையாடும் அந்த காட்சி... ஹிஜாப், போட்டுக்கொண்டு சாலையில் அழகாய் செல்லும் இஸ்லாமிய சிறுமிகள்... தொப்பி போட்டுக்கொண்டு சாலையில் அழகாய் தொழுகைக்கு செல்லும் சிறுவர்கள் ...

ரமலான் மாதத்தின் இறுதி்யில் வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து நடைபெறும் இவ்விருந்தினை சில நல்ல உள்ளங்கள் வருடம் வருடம் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்வார்கள் இதில் ஊர் மக்கள் கலந்து கொள்வார்கள் இது நமது ஒற்றுமையை பல படுத்துவதாக அமையும்....

இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு வி.களத்தூர், மில்லத்நகர் சங்கத்தின் உறுப்பினர்கள் இரவில் அழகான முறையில் ஊர் முழுவதும் தெரு தெருவாக சென்று இஸ்லாமிய  பாடல்களை பாடுவது

அழகான சஹர் உணவு உண்னும் போது பள்ளிவாசலில் பாடும் பைத் வசூலுக்கு வீடு வீடாக வரும் ஏழைகள் அவர்களுடன் வரும் பிள்ளைகள் என நமதூரில் நடக்கும் ஒவ்வொரு அழகான விசயங்களும் ரமலானை நமக்கு நினைவு படுத்துகின்றன...

பெருநாள் அன்று ஒருவொருக்கு ஒருவர் கட்டிதழுவும் அந்த தருணம் ( மாஷா அல்லாஹ் )........ சொல்ல வார்த்தைகளே இல்லை

இது போன்று இன்னும் பல அழகான விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...

- M.முஹம்மது பாரூக்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.