"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/6/17

* வெந்தயம்:
தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். 
இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* தேன்:
சிலர் சர்க்கரைக்கு பதில் வெல்லம் (அ) தேன் சேர்த்துக் கொள்வார்கள். இது தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கும் அளவீடும் தேனுக்கும் சர்க்கரைக்கும் அதிகம். 
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன் உயர் ரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
* கைகுத்தல் அரிசி:
கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மைதான். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது. 
ஆனால், கைக்குத்தல் அரிசியையும் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
* சைவம்/அசைவம்:
எந்த உணவானாலும் சரி… சாப்பிடும் உணவின் அளவைப் பொறுத்தும், அந்த உணவின் ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவைப் பொறுத்தும்தான் சைவம் நல்லதா, அசைவம் நல்லதா என்பதைக் கூற‌ முடியும். 
 ஆனால், பொதுவாக, சர்க்கரை நோயாளிக்கு சைவ உணவுதான் நல்லது. காரணம், நார்ச்சத்து, சைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கிறது. மேலும், கலோரி, கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.
* பாகற்காய்:
பாகற்காயில் அல்கலாய்ட்ஸ் என்ற இரண்டு வேதிப் பொருள்கள் இருப்பதால், சர்க்கரை குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதியியல் அமைப்பு இன்சுலினை ஓரளவுக்கு ஒத்துப் போகிற‌து. 
தவிர, பாகற்காயில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவு. ஆனால், தினமும் பாகற்காய் மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று உறுதியாக கூறுவதற்கு இல்லை.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.