காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1300 பேர் வருகை !
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களின் ஹஜ் விருந்தினர் திட்டத்தின் கீழ் 80 உலக நாடுகளிலிருந்து இந்த வருடம் சுமார் 1300 பேருக்கு ஹஜ் ...
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களின் ஹஜ் விருந்தினர் திட்டத்தின் கீழ் 80 உலக நாடுகளிலிருந்து இந்த வருடம் சுமார் 1300 பேருக்கு ஹஜ் செய்திடும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதுவரை 1279 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர் எஞ்சிய 21 நபர்கள் அமெரிக்கா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இன்று வருகை தரவுள்ளனர்.

1977 முதல் ஹஜ் செய்யும் வாய்ப்பை பெற்ற பாலஸ்தீனிய முஸ்லீம்கள்:
1948 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீனிய மண் ஆக்கிரமிப்பு, கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் போரால் தனிமைப்படுத்தப்பட்ட பாலஸ்தீன் முஸ்லீம்களும், கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட நாட்டின் குடிமக்களாக வழுக்கட்டாயமாக மாறிய பாலஸ்தீன்முஸ்லீம்களுக்கும் 1948 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஹஜ் செய்திடும் பாக்கியம் இல்லாமலிருந்தது.

பின்பு அரபு லீக் நாடுகள் தலையிட்டதன் பேரில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஜோர்டான் நாட்டின் தற்காலிக பாஸ்போர்ட்களை பெற்றுக் கொண்டு தரைமார்க்கமாக பஸ்ஸில் பயணித்து ஹஜ் செய்திடும் வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் பஸ் பயணத்திற்குப் பதிலாக விமான பயணம் மூலம் ஹஜ் செய்ய இஸ்ரேலிய குடிமக்கள் என அடையாளப்படுத்தப்படும் பாலஸ்தீன முஸ்லீம்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த வருடம் 4,500 பாலஸ்தீன முஸ்லீம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top