காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இந்து அமைப்பின் தலைவருக்கு கமல் பதிலடி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை(05 நவ 2017): நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அகில பாரத இந்து மகாசபா"வின் தேசியத் துணைத்தலைவர...
சென்னை(05 நவ 2017): நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அகில பாரத இந்து மகாசபா"வின் தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மாவுக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்து தீவிரவாதம் உண்டு என்று நடிகர் கமல் வார இதழ் ஒன்றின் தொடரில் எழுதியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கெல்லாம் மேல் அகில பாரத இந்து மகாசபா"வின் தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கமலை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்று வெறித்தனமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் பண்டிட் அசோக் ஷர்மாவுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல், "சிறையில் இடமில்லை என்று இப்போது கொலை செய்துவிடுவோம் என்று முடிவெடுத்துள்ளீரா?" என்று நக்கலாக வினா எழுப்பியுள்ளார்.

மேலும் முன்பெல்லாம் விமர்சனம் செய்பவர்களை தேச விரோதி, சிறையிலடைக்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள் தற்போது கொலை செய்ய வேண்டும் என்று திமிரக சொல்கிறார்கள் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top