Mohammed Farook Mohammed Farook Author
Title: சவுதியில் 11 இளவரசர்கள், இன்னாள் முன்னாள் மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டில் அதிரடி கைது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதியில் நேற்று பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை தலைவராக கொண்ட ஊழல் தடுப்பு கமிட்டியை மன்னர் அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக 11 இளவரச...
சவுதியில் நேற்று பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை தலைவராக கொண்ட ஊழல் தடுப்பு கமிட்டியை மன்னர் அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக 11 இளவரசர்கள், 4 இன்னாள் மந்திரிகள் மற்றும் 10க்கு மேற்பட்ட முன்னாள் மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜித்தா வெள்ளப் பெருக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கம்ப்யூட்டர்கள் இணைய தளங்களை குறிவைத்து தாக்கிய கொரோனோ வைரஸ் (Coronavirus) எனப்படும் மெர்ஸ் வைரஸ் (Middle East Respiratory Syndrome - MERS) சம்பந்தப்பட்ட கோப்புகளையும் மீண்டும் தோண்டித்துருவி ஆராயப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசரை தலைவராக கொண்டுள்ள ஊழல் தடுப்புக் கமிட்டி ஊழல்கள் குறித்து விசாரிக்க, கைது செய்ய, பயணத்தடை விதிக்க, வங்கிக் கணக்குகளை முடக்க, பதவியை பறிக்க, பண நடமாட்டம் மற்றும் சொத்து சேர்ப்பு ஆகியவற்றை கண்காணிக்க, ஊழலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரம் பெற்றது.

இதற்கிடையில், தேசிய காவல்படையின் மந்திரி இளவரசர் மிதப் பின் அப்துல்லா நீக்கப்பட்டு அவருக்கு பதில் இளவரசர் காலித் பின் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் திட்டக்குழுவிற்கான மந்திரி ஆதல் பக்கீஹ் நீக்கப்பட்டு முஹமது பின் மஜ்யாத் அல் துவைஜிரியும்,

கடற்படையின் கமான்டர் அப்துல்லா பின் சுல்தான் நீக்கப்பட்டு துணை அட்மிரலான பஹத் பின் அப்துல்லா அல் கிஃபைலி புதிய அட்மிரலாகவும் நியமனம் செய்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top