காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இப்படி ஒரு கோரத்தைப் பார்த்தது இல்லை… சோமாலியா குண்டுவெடிப்பை நேரில் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கதறல்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில், சக்திவாய்ந்த டிரக் குண்டு வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தச் சம்பவத்தை அருகிலிருந்து  பா...
சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில், சக்திவாய்ந்த டிரக் குண்டு வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தச் சம்பவத்தை அருகிலிருந்து  பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், பதற்றத்துடன் தான் கண்ட காட்சிகள்குறித்து ஊடகங்களுக்கு விவரித்துள்ளார்.

“அந்த நாள் எப்போதும் போலத்தான் துவங்கியது. பெரிதாக வேலை எதுவும் இல்லாததால், என் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். இது குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது. திடீரென உலகையே உலுக்கும் பெரும் சத்தம். அப்படி ஒரு சத்தத்தை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. சில நொடிகளில் கரும்புகை வானம் எங்கும் பரவியது.
 
சூரிய ஒளியை மறைக்கும் அளவுக்கு இருந்தது. நான் என் நண்பர்களுக்கும் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் போன்மூலம் தகவல் சொன்னேன். இப்படி ஒரு சம்பவத்தை அவர்களும் உணர்ந்திருந்தார்கள். எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ்களை எடுத்துக்கொண்டு விரைந்தோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. சோமாலியா குண்டுவெடிப்பு 2008-ம் ஆண்டிலிருந்து எங்கள் ஆம்புலன்ஸ் சேவை இயங்குகிறது. ஆனால், இப்படி ஒரு கோரத்தை நாங்கள் எங்கும் கண்டதில்லை. எங்கு பார்த்தாலும் பிணங்கள். பெரிய பெரிய கட்டடங்கள் கூட இடிந்துவிட்டன.

வாகனங்கள் தலைகீழாகக் கவிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன. எங்கள் 10 ஆம்புலன்ஸ்கள் அவ்வளவு பேரையும் ஏற்றிச்செல்ல போதுமானதாக இல்லை. நகரில் இருந்த பலரும் பயத்தில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் போனில் தொடர்புகொண்டு பேசினர். இதனால், மொத்த நெட்வொர்க்கும் ஜாம் ஆகிவிட்டது. எங்களால் மருத்துவமனைகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நான் தினமும் இறந்தவர்களுடன் பயணிக்கிறேன்.

ஆனால், இந்தச் சம்பவத்தினால், நகரில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் ஒருவர் இறந்திருந்தார் அல்லது இறந்தவர்களைத் தெரிந்து வைத்திருந்தனர். இப்போது மொத்த நகரமும் அழுதுகொண்டிருக்கிறது” என்று கண்ணீருடன் பேசினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top