டாக்கா(29 அக் 2017): ரோஹிங்கிய
முஸ்லிம் பெண் அகதிகள் வயிற்றுப் பசியை போக்க விபச்சாரத்தில் ஈடுபடும்
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் அரசின் அடக்குமுறையாலும் ராணுவ
தாக்குதலாலும் ரோஹிங்கியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள்
வங்கதேசத்தில் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மியான்மர் அரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டாக்கவில் தஞ்சமடைந்துள்ள
ரோஹிங்கிய அகதிகளுக்கு உணவு, மருத்துவம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக
அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பலருக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் அவதியுறுவதால் இளம் பெண்கள் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 வயது பள்ளி மாணவி ராணா என்பவர்,
அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள நிலையில் கணவர் குடிகாரனான
கணவரால் சரிவர வாழ்க்கை நடத்தாமல் தற்போது ரோஹிங்கியாவிலிருந்து
வங்கதேசத்திற்கு அகதியாக வந்துள்ளார். அவர் தற்போது விபச்சாரத்தில்
ஈடுபடுத்தப் படுவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல ரோம்பியா என்ற பெண் கூறுகையில்,
"நாங்கள் என்ன செய்வோம், எங்கள் பசி விபச்சாரத்தில் ஈடுபடுத்த தூண்டுகிறது.
வேறு வழியற்ற மக்களாகிவிட்டோமே" என்கிறார் கதறலுடன்.
இதற்கிடையே ரோஹிங்கிய முஸ்லிம்களை
பாதுகாக்க சர்வதேச நாடுகள் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற
குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.