Mohammed Farook Mohammed Farook Author
Title: குவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள் !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது. குவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் ...
குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

குவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அல் ஜெரீதா பத்திரிக்கையில் வெளியான செய்தியை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் உறுதி செய்தார்.

சட்டம் எண் 169இன் படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் ஜிப்ரா கிராஸிங், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்கள், போக்குவரத்திற்கு தடையாக மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தினால் 2 மாதம் வாகனத்தை பிடித்து வைக்கப்படும். மேலும் வாகனத்தை எடுத்துச் செல்லும் ரெக்கவரி வாடகை 10 குவைத் தினாருடன் நாளொன்றுக்கு 1 குவைத் தினார் என அபராதமும் வசூலிக்கப்படும்.

சட்டம் எண் 209இன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதியளிக்கின்றது. சட்டம் எண்கள் 208 மற்றும் 210இன் படி, தடுத்து வைப்பதற்காக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் சேதங்கள் ஏற்பட்டால் போக்குவரத்து துறை பொறுப்பேற்காது.

அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால், சீட் பெல்ட் அணியாமல் சென்றாலும் 2 மாதம் வாகனம் முடக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top