காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஒரு பெண்.... அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து “நான் வணிகம் செய்ய ...
ஒரு பெண்.... அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து “நான் வணிகம் செய்ய விரும்புகிறேன். பண வசதி இல்லை. அரசுக் கருவூலத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் கடன் தந்து உதவுங்கள்” என்றார். நம்ம ஊர் ஆசாமிகளாய் இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத்தான் இஸ்லாம் பெண்கள் மீது சுமத்தியுள்ளது...போய் வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்... என்று அதட்டி அனுப்பியிருப்பார்கள்.

ஆனால் உமர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அரசுக் கருவூலத்திலிருந்து நான்காயிரம் திர்ஹம் கடனாகத் தருகிறார். கடனுதவி பெற்ற பெண் ‘வணிகம் செய்ய உள்ளூர் மதீனா மார்க்கெட்டே போதும்.... ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பை ஓட்டலாம்’ என்று நினைத்தாரா? ஊஹூம்..... சிரியா செல்கிறார்... அதாவது பன்னாட்டு வணிகம்... வணிகத்தில் ஈடுபடுகிறார்... பெரும் லாபம் ஈட்டுகிறார். வெற்றிகரமான பெண் தொழில் அதிபராக மதீனா திரும்புகிறார்.

அந்தப் பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் மனம் மகிழ்ந்து என்ன கூறினார் தெரியுமா? “எனக்கு வசதி இருந்திருந்தால் உங்களுக்கு அளித்த கடன் தொகையை உங்களுக்கே நன்கொடையாக அளித்திருப்பேன். ஆனால் அரசுப் பொதுக் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை. ஆகவே கடனாகத்தான் தர முடிந்தது” என்று கூறி அந்தப் பெண்ணை வரவேற்றார்.

அது மட்டுமல்ல உடனடியாக உமர்(ரலி) அவர்கள் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார். “அரசிடமிருந்து கடன் உதவி பெற்று இதுபோல் வணிகம் செய்ய யார் விரும்பினாலும் அவர் என்னிடம் வரட்டும். ”“யார் விரும்பினாலும்” என்பதில் பெண்களும் உட்படுவர். இஸ்லாம் வானளாவிய வாழ்வியல். - -சிராஜுல்ஹஸன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top