காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: துரோகிகளால் கட்டப்பட்ட செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றலாமா..? உவைசியின் அதிரடிக் கேள்வி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில் “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலா...
பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில் “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது?” என கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு மாநில சுற்றுலாவிற்கான வழிகாட்டியில் இருந்து  தாஜ்மஹாலை நீக்கியது பெரும் சர்ச்சையாக்கியது. இப்போது சங்கீத் சோம் பேச்சும் சர்ச்சையாகி உள்ளது. இவ்விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசு சங்கீத் சோம் கருத்தில் இருந்து விலகிக்கொண்டது.

இந்நிலையில் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவதை நிறுத்துவாரா? என ஐதராபாத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். சங்கீத் சோம் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும் ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி பேசுகையில் “துரோகிகளால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவதை பிரதமர் நிறுத்துவாரா என்பதை தெரிந்துக் கொள்ள விரும்புகின்றேன்.

யுனஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருந்தும் அதனை நீக்கவும் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்” என கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில் இனி ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் பேச்சு கிடையாது? சிலரது இதயத்தை மகிழ்ச்சியடைய செய்ய பிரதமர் இனி நேரு ஸ்டேடியத்தில் இருந்து மக்களுக்கு உரையாற்றுவார் என குறிப்பிட்டு உள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top