காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சிவன் கோவில்தான் தாஜ்மஹால் ஆனது: பா.ஜ.க. எம்.பி கிளப்பும் அடுத்த சர்ச்சை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சிவன் கோவில்தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டதாக பாஜக எம்பி வினய் கத்தியார் அடுத்த சர்ச்சையை எழுப்பியுள்ளார்.உத்தரபிரதேச சுற்றுலா பட்டியலில் இர...
சிவன் கோவில்தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டதாக பாஜக எம்பி வினய் கத்தியார் அடுத்த சர்ச்சையை எழுப்பியுள்ளார்.உத்தரபிரதேச சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசால் நீக்கப்பட்டது. மேலும் உத்தரபிரதேச பாஜக தலைவர்கள் தொடர்ந்து தாஜ்மஹால் குறித்து சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவரும் பாஜக எம்பியுமான வினய் கத்தியார் தேஜோ மஹால் என்னும் சிவன் கோவில் தான் தாஜ்மஹால் என்று  மாற்றப்பட்டதாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தாஜ்மஹால் உள்ளே உள்ள வேலைப்பாடுகளில் இந்து குறியீடுகள் இருப்பதாகவும் இதனை யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டு, தாஜ்மஹாலை தேஜா மஹால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தாஜ்மஹால் குறித்த பாஜக எம்பியின் புதிய சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top