காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ரேசன் உணவு மறுப்பு: பட்டினியால் ஏழை சிறுமி பலி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஜார்கண்ட்(22 அக் 2017): ஜார்கண்ட் மாநிலத்தில் ரேசன் உணவு மறுக்கப்பட்டதால் பட்டினியால் ஏழை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்...
ஜார்கண்ட்(22 அக் 2017): ஜார்கண்ட் மாநிலத்தில் ரேசன் உணவு மறுக்கப்பட்டதால் பட்டினியால் ஏழை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவத்தில் உள்ள கரிமதி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கோய்லி தேவி. இவரின் குடும்ப ரேஷன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கோய்லி தேவியின் குடும்பத்தில் அவருடன் சேர்ந்த்து 10 பேர். நிலையான வேலை இல்லை. சொந்தமாக நிலமும் இல்லை. இதனால் ரேஷன் பொருள்கள் அவர்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டதால் பசியால் வாடியுள்ளனர்.

கோய்லி தேவியின் 11 வயது மகள் சந்தோஷி குமாரி பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்டு வந்துள்ளார். துர்கா பூஜையை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டது. விடுமுறை தினங்களில் மதிய உணவும் கிடைக்காமல் அச்சிறுமி 8 நாள்களாக பட்டினியால் அவதிபட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 28ம் தேதி சிறுமி பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். சிறுமி இறப்புக்கு ரேஷன் பொருள் மறுக்கப்பட்டதே காரணம் என்று சமூக ஆர்வலர் தீரஜ்குமார் கடந்த அக்டோபர் 17ம் தேதி ஊடங்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கரிமதி கிராம மக்கள் கோய்லி தேவி குடும்பத்தை கிராமத்தை விட்டே வெளியேறுமாறு மிரட்டி வருவதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top