Mohammed Farook Mohammed Farook Author
Title: குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
குவைத்தில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கவும் போக்குவரத்து விதிகளில் கடும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என...
குவைத்தில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கவும் போக்குவரத்து விதிகளில் கடும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் அறிவித்துள்ளார்.

அல் சல்மியா பகுதியில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு போக்குவரத்து சட்டங்களை மீறும் ஓட்டுனர்கள் வரவழைக்கப்பட்டு அதிவேகமாக சென்று ரேடார் கேமிராவில் சிக்கியவர்களின் கார்கள், சாலை ஓரங்கள், நடைபாதை மற்றும் போக்குவரத்திற்கு இடஞ்சலாக வண்டியை நிறுத்துவோர்களுடைய வாகனங்கள் என 2 மாதங்களுக்கு போலீஸ் கஸ்டடியில் மறித்து வைக்கப்படும்.

அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களின் வாகனங்களும் 2 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படும்.

சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்லுதல், பொறுப்பற்ற முறையில் தறிகெட்டு வண்டியை ஓட்டுதல், சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் மற்றும் முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் குவைத் பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் அதேவேளை வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top