Mohammed Farook Mohammed Farook Author
Title: அமீரக வானில் வர்ணஜாலம் நிகழ்த்தியது விண்கற்கள் என அமீரகம் அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரக வானில் வர்ணஜாலம் நிகழ்த்தியது விண்கற்கள் என அமீரகம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 7.30 மணியளவில் அமீரகம் மற்றும் அண்டை ...
அமீரக வானில் வர்ணஜாலம் நிகழ்த்தியது விண்கற்கள் என அமீரகம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 7.30 மணியளவில் அமீரகம் மற்றும் அண்டை வளைகுடா நாடுகளின் வான்வெளியில் ஒளிவெள்ளமாய் சில பொருட்கள் சீறிப்பாய்ந்து சென்று வர்ணஜாலம் நிகழ்த்தியது. இந்த அதிசய நிகழ்வு குறித்து இருவேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்காவின் ராணுவம் சம்பந்தப்பட்ட அமைப்பு ஒன்று இது சிறு தவறான கட்டளையால் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்த ரஷ்யாவின் ராக்கெட் என அறிவித்திருந்ததற்கு மாற்றமாக அமீரக வான் போக்குவரத்திற்கான பொது அதிகார ஆணையம் (The General Civil Aviation Authority, GCAA) இது விண்கற்கள் என அறிவித்துள்ளது.

பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் வழமையாக நிகழும் ஓர் நிகழ்வு தான் இந்த எரிகற்களின் (meteor) வருகை என்றும், இத்தகைய எரிகற்களின் வருகை அக்டோபர் 20 ஆம் தேதியில் சற்று மிகைத்திருக்கும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில் துபை வானியல் குழு The Dubai Astronomy Group (DAG) என்ற அமைப்பு, அந்தப் பொருள் விண்கல் அல்ல ரஷ்யா ராக்கெட்டின் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு பகுதியின் கழிவு (விண் குப்பை) அது என்றும் ஆனால் தங்களால் இதுகுறித்து அதிகாரபூர்வமாக ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் உறுதியான தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Dubai Astronomy Group, told the media on Tuesday that the fireball was the falling debris of the Progress space module, also known as the SL-4 R/B (42972U) — a Russian cargo spacecraft used to re-supply the International Space Station (ISS) regularly.

The Progress module is an automated, unpiloted resupply vehicle that was first launched to the ISS in 2000 from Kazakhstan.

It is 6.4 metres in size and carries supplies and fuel of up to 1,700kg.

யாரைத் தான் நம்புவது?

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top