Mohammed Farook Mohammed Farook Author
Title: உங்களிடம் இருந்து விடைபெறுகிறோம்..!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)....                         உங்களிடம் இருந்து (தற்சமயம்) விடைபெறுகிறோம்..! வி.களத்தூர் அளவில் ஒரு நம்பகத...
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)....

                        உங்களிடம் இருந்து (தற்சமயம்) விடைபெறுகிறோம்..!

வி.களத்தூர் அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், எந்தவொரு லாப நோக்கமும் இன்றி வி.களத்தூர் மக்களுக்கு இந்த வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களாக சேவையாற்றி வந்தோம். எங்களால் முடிந்த ஊர் செய்தி முதல் உலக செய்திகள் வரை தினமும் தந்து வந்தோம்.

வி.களத்தூரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் அளித்து உண்மை தண்மை மாறாமல் தந்துக்கொண்டிருந்தோம்.

இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்பட்டது.

கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்த தளம் வி.களத்தூர் பார்வை என்ற பெயரில் முஹம்மது பாரூக் அவர்களால் துவங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த (02/02/2015) அன்று முதல் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் என்ற புதிய முகவரியில் இந்த தளம் இயங்க ஆரம்பித்தது. அதன் பின் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றது.

இந்நேரத்தில் வாசகர்களுக்கும், துனை ஆசிரியராக பணியாற்றிய R. நஜூர்தீன் அவர்களுக்கும், எங்களின் டீம் உறுப்பினர்களுக்கும் எனது சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் தனிப்பட்ட யார் மனதையும் புன்படுத்தமால் செய்தி வெளியிட்டு வந்தோம். நாங்கள் வெளியிட்ட செய்தியில் யார் மனதாவது புன்படுத்தி இருந்தால். மன்னிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்- ஆசிரியர்கள் & வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்
ஆக்கம் - நிறுவனர், M.முஹம்மது பாரூக். BCA.

உங்களிடம் இருந்து (தற்சமயம்) விடைபெறுகிறோம்.. இறைவன் நாடினால் மீண்டும் செயல்பட முயற்சி செய்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top