காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: 6 முஸ்லிம் நாடுகளுக்கான தடையை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஆறு முஸ்லிம் நாடுகளுக்கான அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் தடையை நீக்கி, ஹவாய் மாகாண நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிரியா, லிபியா, ஈரான்,...
ஆறு முஸ்லிம் நாடுகளுக்கான அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் தடையை நீக்கி, ஹவாய் மாகாண நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிரியா, லிபியா, ஈரான், ஏமன், சோமாலியா, சேடு (Chad), வெனிசுலா, வடகொரியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதித்து கடந்த மார்ச் மாதம் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வர இருந்த நிலையில், ட்ரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக ஹவாய் மாகாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி டெர்ரிக் வாஸ்டன் (Derric Waston), 6 இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய ட்ரம்ப் அரசு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், வடகொரியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top