vkrnajur vkrnajur Author
Title: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
 நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளித்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த 4 பேரும் மருத்...
 நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளித்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குறைகள் குறித்து புகார் கொடுக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது திடீரென 4 பேர் யாரும் எதிர்பாராதவிதமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தனர். தீக்குளித்தவர்கள் நெல்லை மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
தீக்குளித்தவர்கள் 4 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசக்கிமுத்து கந்துவட்டி பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனால் மனமுடைந்து 4 பேரும் தீக்குளித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top