Mohammed Farook Mohammed Farook Author
Title: வங்கதேசத்தில் பரிதவிக்கும் 3.40 லட்சம் ரோஹிங்யா குழந்தைகள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மியான்மரிலிருந்து வங்கதேசம் வந்துள்ள 6 லட்சம் ரோஹிங்யா அகதிகளில், 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யூ...
மியான்மரிலிருந்து வங்கதேசம் வந்துள்ள 6 லட்சம் ரோஹிங்யா அகதிகளில், 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

யூனிசெஃப் அதிகாரி சிமோ இன்கராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மியான்மரிலிருந்து வங்கதேசம் வந்துள்ள 6 லட்சம் ரோஹிங்யா அகதிகளில், 3 லட்சத்துக்கு 40 ஆயிரம் குழந்தைகள் போதுமான உணவின்றி, தண்ணீரின்றி, முறையான பொது சுகாதாரமின்றி தவித்து வருகின்றனர். இப்பிரச்னை, குறுகிய காலத்திலோ மிக விரைவாகவோ முடியக்கூடியதல்ல. 5 வயதுக்குக் கீழ் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைப்பாட்டுடன் உள்ளதாகவும் காலரா போன்ற நோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்யா இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ரக்ஹைன் பகுதிக்குள் ஐ.நா-வை அனுமதிக்க மியான்மர் அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. மியான்மர் ராணுவத்தின் முற்றுகையில் உள்ள அப்பகுதியில் உள்ள ரோஹிங்யா மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top