"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/9/17

ஹஜ் புனித யாத்திரையின் கடமைகள் நிறைவுற்ற நிலையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையின் போது மக்கா மற்றும் மதினாவில் உள்ள இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளும் சுமார் 2 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களால் நிரம்பி வழிந்தது.

புனிதப்பள்ளிகளின் அனைத்து தளங்களும், வெளிப்புற வராண்டா பகுதிகளும், சாலைகளும், உட்புற சந்துகளும், புனிதப்பள்ளிகளை சுற்றியுள்ள கட்டிடங்களின் மொட்டை மாடிகளும் மனித வெள்ளத்தால் நிரம்பியிருந்தன.

புனித மக்காவிலுள்ள (கஃபத்துல்லாஹ்) பள்ளியில் இமாம் கதீப் ஷேக். காலித் அல் காம்தி அவர்களும், மதினாவிலுள்ள மஸ்ஜிதுன்னபவியில் இமாம் கதீப் ஷேக். அப்துல் மொஹ்சீன் அல் கஸீம் அவர்களும் அல்லாஹ்விற்கும் அவனது தூதர் முஹமது (ஸல்) அவர்களுக்கும் செவிசாய்த்து முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.