"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/8/17

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துகஹு... நேற்று  27-08-2017) பெரம்பலூர் டீயான்சி மஹாலில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு தமுமுக & மமக மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார், தமுமுக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

மமக மாநில செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மமக மாவட்ட துணைச் செயலாளர் முகமது ஹனிபா நன்றியுரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் புதிய மாவட்ட நிர்வாகிகள் மாநில செயலாளர் அப்துல் சமது அவர்களின் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விவரம்
தமுமுக & மமக மாவட்ட தலைவர்: சுல்தான் மொய்தீன்,
தமுமுக மாவட்டச் செயலாளர்: குதரத்துல்லாஹ்,
மமக மாவட்டச் செயலாளர்: மீரான் மொய்தீன்,
தமுமுக & மமக மாவட்ட பொருளாளர்: முகமது இலியாஸ்,
தமுமுக & மமக மாவட்ட துணைத் தலைவர்: ரஷீத் அகமது,
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள்:
1. முகமது இலியாஸ்,
2. நூர் முகமது,
3. ஜமீர் பாஷா,
மமக மாவட்ட துணைச் செயலாளர்கள்:
1. ஹயாத் பாஷா,
2. சையத் உசேன்,
3. முகமது ஹனிபா,
இறுதியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் நிகழ்வை மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் துவங்கி வைத்தார்.
புகைப்படம்:
தகவல்:ஷாகுல்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.