"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/8/17

இனத்தால் நிறத்தால் மொழியால் குலத்தால் உருவாகும் அனைத்து வேற்றுமைகளையும் வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்

சிலர்கள் சமத்துவத்தை பற்றி மேடைகளில் முழங்குவார்கள் ஏடுகளில் எழுதுவார்கள் ஆனால் நடைமுறையில் இருந்து சமத்துவத்தை வெகுதொலைவில் விலக்கி வைப்பார்

மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே அவர்களிடையே இனத்தாலோ குலத்தாலோ மொழியாலோ வேற்றுமைகளை கற்பித்து அதன் அடிப்படையில் உயர்வு தாள்வுகளை கற்பிப்து மடமையின் அடையாளம் என பிரகடனம் செய்யும் இஸ்லாம் அதை தெளிவாக நடை முறைபடுத்தியும் காட்டுகிறது

இந்தியாவில் இன்று கூட தலித் மக்கள் மற்ற இந்துக்களோடு சமத்துவமாக நடத்த படுவதில்லை தனிகுவளை முறையும் தனி சுடுகாடு முறையும் தனிகோவில் முறையும் இன்றளவும் இந்தியாவில் நிலைத்திருப்பதே இதற்கு போதிய சான்றாகும்

இதோ நாம் வெளியிட்டுள்ள படம் இஸ்லாம் மனிதர்களிடையே வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது என்பதற்கு சான்றுபகரும் படங்களில் ஒன்றாகும்

ஆம் ஆப்ரிக்காவின் கானா நாட்டை சார்ந்த பலர்கள் இஸ்லாத்தில் இணைநதனர் அவர்களில் பலர் சென்ற ஆண்டு ஹஜ் செய்ய வந்தனர்.

அவர்களை மக்கா என்னும் முஸ்லிம்களின் முதல் நிலை புனித தலத்தின் இமாம் வரவேற்று கட்டி அணைத்து கைகொடுத்து உபசரிக்கும் உன்னத காட்சியை தான் படம் விளக்குகிறது

மக்கா இமாமின் சந்திப்பிற்கு பிறகு அவர்கள் கூறியது

நாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் உள்ள கால கட்டத்தில் எங்கள் இனத்தவர்களை தவிர மற்றவர்கள் எங்களை தீட்டாகவே கருதினர்

எங்களோடு உரையாடுவதையே எங்களோடு கை குலுக்குவதையோ அவர்களுக்கு இணையாக எங்களை அமர வைப்பதையோ மற்றவர்கள் ஒரு போதும் ஏற்று கொண்டதில்லை

ஆனால் இஸ்லாம் அனைத்து வேற்றுமைகளையும் அழித்து ஒழித்தது. இஸ்லாத்திற்கு பிறகு எங்களுக்கான சுயமரியாதை கிடைத்திருக்கிறது. வஞ்கிக்க பட்ட ஒடுக்கபட்ட மக்களின் புகலிடமாக இஸ்லாம் மட்டுமே இருக்க முடியும்

எனவே ஒடுக்க பட்டவர்களும் இனஇழிவை சந்தித்து கொண்டிருப்பவுர்களும் இஸ்லாத்தை நோக்கி அணிவகுப்பதே சரியான முடிவாகும் எனவும் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.