Mohamed Farook Mohamed Farook Author
Title: ”கஞ்சா” போதைக்கு அடிமையாகும் நமதூர் இளைஞர்கள் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
”கஞ்சா” போதைக்கு அடிமையாகும் நமதூர் சில இளைஞர்கள் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! இன்று வளர்ந்து வரும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளில், மாண...
”கஞ்சா” போதைக்கு அடிமையாகும் நமதூர் சில இளைஞர்கள் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இன்று வளர்ந்து வரும் உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சனை பலராலும் பேசப்படுகின்றது.

ஆனால் சமீப காலமாக நமது வி.களத்தூரில் இருந்து கல்லூரில் தங்கி படிக்கும் சில இளைஞர்களும் பெரம்பலூர், திருச்சி தனியார் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம். பார்க்க நல்லவர்கள் போல் காட்சி அளித்து கொண்டு செய்யும் செயல் அனைத்தும் தவறாகவே இருக்கிறது.

சொல்வதற்கு வாய் கூசும் அளவுக்கு பல கீழ்தரமான, கேவலமான காரியங்கள் நம்மை ஆட்டிப்படைத்து வருகின்றன. இந்த காரியங்களை குறிப்பிட்ட வயதினர்களோ, குறிப்பிட்ட மதத்தினர்கள் தான் செய்கின்றார்கள் என பிரிக்க முடியாது. அந்த வகையில் பல கேவலமான காரியங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவி ஊரே சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது எனலாம். அந்த வகையில் ஒரு ஊடகமாக எங்கள் மீதுள்ள சமுக சமுதாய பொறுப்பை உணர்ந்து நமதூர் மக்கள் சென்றுக்கொண்டிருக்கும் இந்த தவறான பாதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த பதிவை பதிகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

இந்த கஞ்சா பழக்கத்தால் வி.களத்தூரில் இருந்து கல்லூரிக்கு செல்லும் சில இளைஞர்கள் அடிமையாகி விட்டனார். இது பலரை தாக்கும் ஆபாயம்  சுழ்நிலையில் உள்ளது. தவறான கூட்டாளிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமே என்று துவங்கப்படுவது தான் இந்த கஞ்சா பழக்கம்.

இதனை உட்கொண்ட உடனே அவர்கள் உடலிலும் மூளையிலும் ஒருவித மாற்றம் ஏற்ப்படுகின்றது. அது அவர்களுக்கு சுகம் தந்துவிடுவதால் அந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காக இந்த கஞ்சாவிற்கு அடிமையாகின்றனர். இதன் காரணமாக பல நல்ல மாணவர்களும் இதனால் வழி தவற வாய்ப்புள்ளது. இந்த போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கிறான் மயங்குகின்றான் உடல் பலவீனமடைகிறது. உள்ளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றனர்.

அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான். (வீணான செலவு களால்) வறுமை ஏற்படுகிறது. குடும்பத்திற்கென்று இருந்த மானம்-மரியாதை, கௌரவம் இழக்கப்படுகின்றது. இதனால் மனச்சோர்வு ஏற்படும் அளவிற்கு செல்கின்றனர். பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை

சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றனர். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். கல்லூரிக்கு சென்று படிப்பை முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபமாக வருகிறார்கள்.  இதில் சில நல்ல பிள்ளைகள் தப்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட கஞ்சாவினை நமதூரை சேர்ந்த சில நபர்கள் கூட்டாக சேர்ந்து ஏரிப்புறக்கரை, கல்லாற்றில் பயன்படுத்த தொடங்கி உள்ளன.

இந்த கஞ்சாவினை சிகெரெட் இடையில் வைத்து புகைத்து, போதையை அனுபவிக்கின்றனர். நமது பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவ நம்பிக்கை ஏற்படுகின்றது. இதன் காரணமாக பல நல்ல மாணவர்களும் இதனால் வழிதவற வாய்ப்புள்ளது.

கஞ்சா அடிப்பவர்களை மீட்டு கொண்டுவருவதற்கும் பல்வேறு காப்பகங்கள், ஆலோசனைகள், போதை மீட்பு உளவியலாளர்கள் உள்ளனர். உங்கள் வீட்டில் இது போன்று யாரேனும் இருந்து இந்த தீய பழக்கத்தில் இருந்து விடுபட தகுந்து உளவியல் ஆய்வாளர்களிடம் அழைத்து  சென்று தகுந்த மருத்துவ மனோதத்துவ சிகிச்சை அளித்து அவரை மீட்கலாம்.

குறிப்பு : இதுபோன்ற காரியங்களை செய்கின்ற சிலருக்கு இப்பதிவு அந்த சிலர் நாளை பலராக மாறிவிட கூடாது என்பதற்காகவே...!!

சமுதாய நலன்கருதி - முஹம்மது பாரூக். வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top