"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/8/17


பொதுவாக அமீரகம் முழுவதுமே நவீன ரேடார் கேமிராக்களை நிறுவியுள்ளதுடன் காலத்திற்கு ஏற்றவகையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகும் நவீன வகை கேமிராக்களை கொண்டும் சாலை கண்காணிப்புக்களை தீவிரப்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஷார்ஜாவில் புதிய ஸ்மார்ட் ரேடார் கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.


இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக்கள் முக்கியமாக 3 வகையான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்காணிக்கும்.
1. சீட் பெல்ட் அணியாத அனைத்து பயணிகள், டிரைவர் உட்பட.
2. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி தராத டிரைவர்கள்.
3. டிரக்குகளுக்கென்று ஒதுக்கப்பட்ட டிராக்கில் செல்லாமல் எல்லை மீறும் டிரக் டிரைவர்.



மேற்காணும் 3 முக்கிய போக்குவரத்துக் குற்றங்களுடன் கூடுதலாக வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோர், வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனமின்றி அலைமோதுவோர், அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வோர் என கண்காணித்து பிடிப்பதுடன் கூடுதலாக நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை வீடியோ காட்சிகளாக படம்பிடிக்கவும் வல்லவை இந்த ஸ்மார்ட் ரேடார் கேமிராக்கள் என ஷார்ஜா போலீஸ் தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.