"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/8/17

ஹஜ் பாதுகாப்பு படையினர் அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் குறிப்பாக வயதான யாத்ரீகர்களுக்கு வருடந்தோறும் வழங்கிவரும் கனிவான சேவையை இன்முகத்துடன் வழங்கி வருகின்றனர்.

இன்னொரு புறம் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 12 வரையான காலத்தில் மட்டும் சவுதியின் பல பகுதிகளிலிருந்தும் முறையான ஹஜ் பெர்மிட்டுகள் இல்லாமல் மக்கா உட்பட பல்வேறு புனிதத் தலங்களின் சோதனைச்சாவடிகளிலிருந்து இதுவரை சுமார் 95,400 உள்நாட்டு ஹஜ் பயணிகளும் சுமார் 47,700 வாகனங்களும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என புனித ஹஜ் பாதுகாப்புப் படையின் கமான்டர் ஜெனரல் காலித் அல் ஹர்பி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புனித மக்காவினுள் நுழைந்துவிட்டவர்கள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் வழியாக அத்துமீறி உள்நுழைபவர்கள் அனைவரும் தொடர் சோதனைகள், வான்வெளி கண்காணிப்புக்கள் மூலம் பிடிக்கப்பட்டு கடும் அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த ஞாயிறு வரையிலான கணக்கின்படி, முறையான பெர்மிட்டுடன் இதுவரை 675,143 ஹஜ் யாத்ரீகர்கள் சவுதிக்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் 663,860 பேர் விமானங்கள் மூலமும், 10,796 பேர் தரைவழிப் போக்குவரத்து மூலமாகவும், 487 பேர் கப்பல் மூலமும் வருகை தந்துள்ளனர்.

ஹஜ் பயணிகள் சிரமமின்றி தவாப் சுற்றுவதற்காக செய்யப்படும் கூடுதல் ஏற்பாடான மடஃப் (Al Mataf) தவாப் சுற்று பாதைகள், பாலங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன இவற்றை சுமார் 200 பொறியாளர்கள் உருவாக்கி இந்த ஹஜ் காலம் முழுவதும் கண்காணித்து வருவர். இந்த மடஃப் பாலத்தின் வழியாக மணிக்கு சுமார் 105,000 ஹஜ் யாத்ரீகர்கள் சுமூகமாக தவாப் சுற்றி வர முடியும்.

உள்நாட்டு பயணிகளுக்கான மலிவுவிலை (Low Cost) ஹஜ் திட்டத்தின் அனைத்து இருக்கைகளும் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்ட நிலையில் மேலும் சுமார் 3,000 மலிவுவிலை இருக்கைகளை ஆன்லைன் முன்பதிவின் மூலம் வழங்க ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் முன்வந்துள்ளது. சுமார் 14,000 ரியால் செலவிற்குள் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து என அனைத்து செலவுகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

இதற்கிடையில் நேற்று மக்காவின் துணை அமீர் இளவரசர் அப்துல்லாஹ் பின் பந்தர் ஹஜ் பயணிகள் தங்களின் ஹஜ் அனுஷ்மானங்களை நிறைவேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'அல் மஷாயர்;' (Al Mashayer Train) எனும் ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.