காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நேற்று மெக்கா ஹோட்டலில் தீ - 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
புனித மக்கா நகரின் அஸீஸியா பகுதியில் அமைந்துள்ள 15 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. இந்த ஹோட்டலின் 8வது மாட...
புனித மக்கா நகரின் அஸீஸியா பகுதியில் அமைந்துள்ள 15 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. இந்த ஹோட்டலின் 8வது மாடியில் உள்ள ஏர் கண்டிஷன் கருவியில் ஏற்பட்ட கோளாரால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த துருக்கி மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தால் யாருக்கும் எத்தகைய காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித மக்காவிலுள்ள அவசரகால உதவிக்குழுக்கள் உடனடி மீட்புப்பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் செயலாற்றினர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top