"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/7/17

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவராக இருந்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து பரிசீலிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 29.06.2017 வியாழக் கிழமை கூடியது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பங்கேற்றார்கள்.

நடந்த இக்கூட்டத்தில் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபியின் ராஜினாமாவை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. எனவே அடுத்த பொதுக்குழு கூடும் வரை மாநிலத் துணைத் தலைவராக உள்ள எம்.ஐ. சுலைமான் தலைவர் பொறுப்பை கவனிப்பார் என உயர்நிலைக்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு - மாநில நிர்வாகம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.