காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெறும் ஜூம்மா தொழுகை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஐடியல் பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக தனது கல்வி பணியை வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக செய்து வருக...
வி.களத்தூர் ஐடியல் பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக தனது கல்வி பணியை வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக செய்து வருகிறது.

இந்த கல்விப்பணியை மேலும் வளர்க்கும் முயற்சியில் வி.களத்தூர் ஐடியல் பள்ளியின் புதிய கட்டிடம் இந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டு மெட்ரிகுலேஷன் கல்வித்தரத்துடன் செயல்பட்டு வருகிறது


ஜும்மா உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)

சென்ற ஆண்டில் ஐடியல் பள்ளி இஸ்லாமிய மாணவர்கள் வாரம் வாரம் ஜும்மா தொழுகைக்காக வி.களத்தூர் பள்ளிவாசலில் நடைபெறும் ஜூம்மா தொழுகையில் கலந்துகொள்வது வழக்கம்.

தற்போது ஐடியல் பள்ளியின் புதிய கட்டிடம் வண்ணாரம் பூண்டில் இருப்பதால் மாணவர்களுக்கு ஜூம்மா தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடு நிர்வாகத்தின் சார்பாக பள்ளி வாளகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இமாம் அழைக்கப்பட்டு தொழுகை நடைப்பெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தொழ புதிய பள்ளிவாசல் விரைவில் ஐடியல் பள்ளி மைதானத்தில் கட்டப்பட உள்ளது. - என பள்ளி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top