"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/6/17

RSS, BJP நண்பர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்..  காரணம் உங்கள் நோன்பு…

அட உங்க இறை நம்பிக்கைய பாத்தெல்லாம் அவங்களுக்குப் பயம் இல்லை ...

நீங்கள் நோன்புக் கஞ்சியை மாற்று மத மக்களோடு பகிர்ந்து கொள்வதும்..

இந்து மத மக்கள் உங்களோடு உறவாடுவதும்..

இந்துக்கள் உங்கள் பள்ளிக்கு வந்து பெரிய பாத்திரத்தில் கஞ்சி வாங்குவதும்., நீங்கள் கொடுப்பதும் ...

இந்துக்கள் அந்த நோன்பு கஞ்சியை விரும்பிக் குடிப்பதும் ....

அதில் மாட்டுக்கறி கலந்துடுவான் நு வதந்தியைக் கிளப்பியும் தடுக்க முடியாமல் போனதும் ...

சில பிராமணர்களும் பூசாரிகளும் இதுல கரி இருக்காங்க பாய் என்று கேட்டு இல்லேனு உறுதிப்படுத்திட்டு குடிக்கறதும்...

இதயெல்லாம் தடுக்க முடியலயேன்னு RSS.,VHP,.BJP கதறி த் துடிப்பதும் .., கண்கூடாய்க் காண்கிறேன்..

”நீங்கள் உண்ணும் அளவே உங்கள் சகோதரனுக்கும் கொடுங்கள்” என்கிற முகம்மது நபியின் வார்த்தைகளையும் தாண்டி ஒரு குவலை அளவு நோன்பு திறக்க எடுத்துக் கொண்டு...

இருகை நிரம்ப இரு பெரிய பாத்திரங்களில் பிறமத மக்களுக்கும் கொடுத்து கொண்டாடுவது....

தொடரட்டும் உங்கள் நட்பு…

பேஸ்புக்கில் 2 வருடங்களுக்கு முன்  எழுதிய இந்துமத சகோதர் ஒருவரின் அருமையான பதிவு…....

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.