"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/6/17

அமீரகம், ஓமனில் நடைமுறைப்படுத்தப்படுவது போலவே சவுதியிலும் 3 மாதங்களுக்கான தினமும் 3 மணி நேர கட்டாய ஓய்வு நேரம் 15.06.2017 முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி தினமும் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை சூரியன் சுட்டெரிக்கும் திறந்த வெளிப்பகுதியில் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.