"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/6/17

உடல் ரீதியாக ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு, இயற்கையான உணவுகள் தான் சிறப்பான தீர்வினை அளிக்கிறது. அந்த வகையில், நம் உடம்பில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து, துவரம் பருப்பு, முட்டை சேர்த்துச் சமைத்து, நன்கு கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகுவதுடன், உடலின் வலிமையும் அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொரியல் செய்து காலை மற்றும் மதிய உணவுடன் சேர்த்து, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், அது உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கி, உடலின் பலத்தை அதிகரிக்கும்.

புதினா கீரை
புதினாக் கீரையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
ஆறியதும் வடிக்கட்டி, அதில் 1/2 டம்ளர் பால் மற்றும் சர்க்கரை கலந்து காலை மற்றும் மாலை வேளையில் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

அரைக்கீரை
அரைக்கீரையுடன் சிறிது பருப்பு சேர்த்து சமைத்து, அதை காலை மற்றும் மாலை உணவாக சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

உலர் திராட்சை
தினமும் உலர்ந்த திராட்சை அல்லது பச்சை திராட்சை சாப்பிட்டு வந்தால், ரத்தம் தூய்மை அடையும்.

பப்பாளி
தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு, ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால், உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

அத்திப்பழம்
3 அத்திப்பழத்தை காய்ச்சிய பாலில் வேகவைத்து, 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் குறைவு பிரச்சனையை தடுத்து, உடலின் ரத்தோட்டத்தை அதிகரித்து, புத்துணர்வை அளிக்க உதவுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.