"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/6/17

நாட்டில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்து - இஸ்லாமிய மக்களிடையே மோதல் வலுத்துக்கொண்டிருப்பதாக பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளத்தில் உள்ள இந்து கோயில் ஒன்றின் நிர்வாகத்தினர், இஸ்லாமிய மக்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கி மகிழ்ந்துள்ளனர். இஃப்தார் விருந்து வழங்கப்பட்டதன் பின்னணி அறிந்தால் வியப்படைவீர்கள்.

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள்  வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். வளைகுடா, பணம் கொழிக்கும் பூமி. கேரள மாநிலத்தின் 'கால்பந்து தலைநகரம்' என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள்.

மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும். மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.
புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.
'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி  நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர். இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!

திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து,  நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.
 
நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.  இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர். அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.

நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில்  இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.