Mohammed Farook Mohammed Farook Author
Title: திருமுருகன் காந்தி மீதான 'குண்டாஸ்': ஐ.நா.,வில் எழுப்பப்பட்ட கேள்விகள்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று பேர் கண்டனங்களைத் தெரிவித்த...
திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று பேர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

அனுமதியின்றி மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. ஓப்பன் ஸ்டேட்மென்ட் முடிந்தவுடன், அரசியல் சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடந்தது. தமிழக தலைநகர் சென்னையில், மே 17 இயக்கத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டபோது, நினைவேந்தல் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். இது பெரும் விவாதங்களை கிளப்பும் என தெரிகிறது. மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் தற்போது உண்டாகியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top