"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/6/17

வளைகுடா நாடான கத்தார் மற்ற அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாகவும் கூறி கத்தாரின் உறவை நான்கு நாடுகள் துண்டித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கடியில் கத்தார்


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து , பஹரைன் ஆகிய நாடுகள் கத்தாரின் உறவைத் துண்டித்துள்ளன. அரபு நாடுகளில் தீவிரவாதத்தை செயல்படுத்த கத்தார் நிதியுதவி செய்வதாக அதன் மீது குற்றச்சாட்டு.

பஹரைனின் உள்நாட்டு விவகாரங்களில் கத்தார் தலையிடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றச்சாட்டு. பஹரைனில் இருக்கும் கத்தார் நாட்டவர் 14 நாட்களில் நாட்டை விட வெளியேற உத்தரவு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 48 மணி நேரத்தில் கத்தார் நாட்டவர் வெளியேற வேண்டும். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து நாடுகள் கத்தாருடன் இருக்கும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தின.

40 % உணவுப் பொருட்கள் சவுதி அரேபியா வாயிலாக கத்தாருக்கு வருகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பீதி.

அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளை முற்றுகையிடும் மக்கள். காத்தாருக்கு செல்லும் சாலைகள், நீர் வழி போக்குவரத்து, மற்றும் வான் வழி போக்குவரத்து அனைத்து வழிகளையும் அதன் அண்டை நாடுகள் முழுவதுமாக முடக்கியுள்ளன. இதனால், கத்தாரி பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளுக்கு படையெடுத்து செல்வது போல் சென்று பொருட்களை வாங்கினர்.

சவூதி அரேபியா வழியாக 40 சதவிகித உணவுப்பொருட்கள் கத்தாருக்கு வரும் நிலையில் அவை அனைத்தும் கத்தாருக்கு வெள்ளியே எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடிப்படை பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

thanks - http://ns7.tv/ta/tamil-news/

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.