Mohammed Farook Mohammed Farook Author
Title: நீயும் புள்ளைங்களும் சந்தோசமா ரம்ஜானை கொண்டாடனும் சரியா!! - வெளிநாட்டு வாழ்க்கை‬!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
காலை‬: IMO ஹலோ.. என்னங்க நீங்க வெளிநாட்டுல இருந்து அனுப்பிய பணம் கிடைச்சுருச்சு. வீட்டுல எனக்கும், குழந்தைகளுக்கும் பெருநாள் ஜவுளி எடுத...
காலை‬: IMO
ஹலோ..
என்னங்க நீங்க வெளிநாட்டுல இருந்து அனுப்பிய பணம் கிடைச்சுருச்சு. வீட்டுல எனக்கும், குழந்தைகளுக்கும் பெருநாள் ஜவுளி எடுத்துட்டோம்..
இந்தா பாருங்க என் சேலை எப்படி இருக்கு.நல்லா இருக்கா, என்ன பேசாம பார்த்துக்கிட்டே இருக்கீங்க நல்லா இல்லைனா சொல்லுங்க கடையில போய் மாத்திருதேன் என்றாள்..
நல்லா இருக்குடி, நீ உடுத்துறதாலதான் அந்த சேலைக்கே ஒரு அழகுடி என்றதும்,
போங்க எனக்கு வெக்கமா இருக்கு என்று தலை குனிந்தாள்.
சரி சரி ரொம்ப பொய் சொல்லி வழியாதிங்க
இன்னும் ரெண்டு நாளுல பெருநாள் வந்துரும்.எக்கச்சக்கமா வேலை கிடக்குங்க.
.
நீங்க ஜவுளி எடுத்தாச்சா,
நீங்க எடுத்த சட்டையை காட்டுங்க.
அப்பதான் நாங்க இங்க சந்தோசமா பெருநாளை கொண்டாடுவோம். இல்லைனா நான் எடுத்த சேலையை பெருநாளுக்கு உடுத்த மாட்டேன் ஆமா.
மனைவியின் அன்பையும் வைராக்கியத்தையும் அறிந்த அவன் மனசு பிசைந்தது..

நான் எடுத்துடேன்டி கைலாம் ஒரே அழுக்கா இருக்கு, இப்போ பிரிச்சு காட்டுனா புது துணி அழுக்காயிரும் கொஞ்சம் வேலை வேற இருக்கு அதை முடிச்சுட்டு இராத்திரி வாட்ஷ்அப் ல போட்டோ எடுத்து அனுப்புறேன் சரியா என்றான்..
ம்ம் நான் எதிர்பார்த்துகிட்டே இருப்பேன் மறந்துறாதிங்க என்ற படி போனை வைத்தாள்..

மதியம்‬: FACEBOOK MESSENGER :
சலாம் காதர் பாய்,
பெருநாள் டிரஸ்லாம் எடுத்துட்டீங்க போல, பேஸ்புக்ல பதிவு போட்டு ஜமாய்கிறீங்க.. கலக்குங்க..
அப்புறம் காதர் பாய் நீங்க பேஸ்புக்ல நாலைஞ்சு சட்டையை மொத்தமா போட்டோ எடுத்து போட்டு இருக்கீங்க.அதுல அந்த ஸ்கை புளூ சூப்பரா இருந்துச்சு..
அதை மாதிரி நான் எடுக்கனும் அந்த சட்டையை மட்டும் தனியா போட்டோ எடுத்து அணுப்புங்க பாய் என்று ஊரில் உள்ள தனக்கு தெரிந்த முகநூல் நண்பரிடம் கேட்டுக்கொண்டான்.
அப்படியா ரொம்ப சந்தோசம், அது இங்க கம்மியான ரேட்டுதான். ஒன்லி தவ்ஸன் ரூபிஸ்தான் என்று சொன்னவாறு போட்டோ எடுத்து அனுப்பினார்.

இரவு‬: WhatsApp;
சாரிமா..
கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு அதான் லேட்டாயிருச்சு.
பெருநாளைக்கு எடுத்த டிரஸை அணுப்பிருக்கேன் பாரு, எல்லாம் உனக்கு பிடிச்ச அதே ஸ்கை புளூ கலருதான்..

நீயும் புள்ளைங்களும் சந்தோசமா ரம்ஜானை கொண்டாடனும் சரியா.
உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம் என டைப் செய்து கொண்டிருக்கும் போதே கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது அவனுக்கு.. தான் டவுண்லோடு செய்த சட்டை அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தது..

வெளிநாட்டு வாழ்க்கை!!!

Thanks To:  Siddiq Maricar. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top