"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/6/17

https://1.bp.blogspot.com/-vk10iYM8Kd8/V28LoZ7EY3I/AAAAAAAAUn0/1niRji3VE74VZIl7lSeM3h37w852VJfHgCLcB/s1600/vkalathur.jpgவி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) நாளை இரவு மாபெரும் சஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது ( நாளை மறுநாள் நோன்பிர்க்கான சஹர்) விருந்து ஆகும்.

வி.களத்தூரில் இந்த சஹர் விருந்து ஏற்பாடு கடந்த 2009 ஆண்டில் இருந்து சிறப்பாக நடைபெற தொடங்கியது 2009 ஆம் வருடம் இரண்டு சங்கத்தின் இளைஞர்களுடன் சேர்த்து சுமார் 100 பேருக்கு சஹர் விருந்து கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு 2010 ஆம் வருடம் இரண்டு சங்கத்தின் இளைஞர்களுடன் மட்டுமல்லாமல் ஊரின் நலனுக்காக பாடுபடும் இளைஞர்களுக்கும் சேர்த்து சுமார் 150 பேருக்கு சஹர் விருந்து கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு 2011ஆம் ஆண்டு சுமார் 200க்கும் அதிகமானவர்களுக்கு சஹர் விருந்து கொடுக்கப்பட்டது. அந்த வருடம் இரண்டு சங்கத்தினருக்கும் மற்றும் ஊரின் ஜமாத்தில் முக்கியப் பொருப்புகளில் உள்ள அனைவருக்கும், அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு சஹர் விருந்துக் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சஹர் விருந்திற்கு வீட்டிற்க்கு ஒருவர் என்ற முறையில் சுமார் 650 மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டு விருந்தினை சிறப்பித்தனர்.

2013ஆம் ஆண்டு ஊர் இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு சஹர் விருந்து நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் இறைவனின் கிருபையால் நடைபெற உள்ளது. இந்த விருந்திற்கு வி.களத்தூர் இஸ்லாமிய பொது மக்கள் அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இனைந்து இருங்கள் வளைகுடா மக்களுக்கு சஹர் புகைப்படங்களை தருகிறோம்....  - வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் மீடியா

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.