"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/6/17

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், குடியரசுத்  தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த பேச்சில் மோகன் பகவத் பெயர் தொடங்கி நடிகர் ரஜினிகாந்த் பெயர்வரை அடிப்பட்டது.

அரசியல் கட்சிகளும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன. எனவே இத்தேர்தல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் ஆணையத் தலைவர் நஜிம் ஜைதி  குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசிய நஜிம் ஜைதி ‘ ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். குடியரசு தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் வாக்களிப்பர். மாநில மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களின் வாக்கு மதிப்பீடு செய்யப்படும்.  ஜூன் 14 ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.  வாக்கு எண்ணிக்கை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும்’ என்று குறிப்பிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.