"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/6/17

விபத்து ஒன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீன முஸ்லிம் பெண்ணொருவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு இஸ்ரேல் இனத்தவரான யூத செவிலியர் பாலூட்டிய சம்பவம் உலகில் மக்களின் மனதை வென்றெடுத்துள்ளது.

உலா ஒக்ஸ்ட்ரோவிஸ்க் சக் என இந்த யூத இன செவிலியரும் குழந்தை ஒன்றின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன பெண், அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் இன் கரீம் பகுதியில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார், அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக செயற்பட்ட இஸ்ரேலிய மருத்துவ உதவியாளர்கள் படுகாயமடைந்திருந்த பெண் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் ஹதாஸ் எலின் கரீம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு உலா ஒக்ஸ்டேராவிஸ்க் சக் என்ற செவிலிய பெண்மணியிடம் வழங்கப்பட்டது.
குழந்தைக்கு புட்டி பால் ஊட்ட அவர் பல மணிநேரம் முயற்சித்துள்ளார். முயற்சி தோல்வியடைந்ததால், அவரே குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.
விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் விபத்துக்கு உள்ளான பெண்ணின் மூத்த சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

பாலஸ்தீன இனத்தவர்களான குடும்பத்தினர், செவிலியரின் செயலை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். அதனை தாங்கிக்கொள்ள முடியாது, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். எவ்வாறாயினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள குழந்தைக்கு பாலூட்டிய யூத செவிலியர், தான் குழந்தைக்கு 5 தடவைகள் பாலூட்டியதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரது மனதிலும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் குழந்தையை பாராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.