Mohammed Farook Mohammed Farook Author
Title: வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வ ளைகுடா நாடுகள், கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவைத் துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர...
ளைகுடா நாடுகள், கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவைத் துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர் விமானங்களை அந்த நாட்டுக்கு வழங்குகிறது.

வளைகுடாவில் எண்ணெய் வளமிக்க குட்டி நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி புரிவதாகவும் ஈரான் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி சவுதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள், அந்த நாட்டுடனான ராஜ்ஜிய உறவைத் துண்டித்துள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிற இஸ்லாமிய நாடுகளும் விரைவில் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துக்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா 36 எப்.15 ரக போர் விமானங்களைக் கத்தாருக்கு வழங்கப்போவதாக பென்டகன் இன்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்றுதான், 'கத்தார் தீவிரவாதத்துக்குத் துணைபோகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார். அடுத்தநாளே விமான விற்பனை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதத்தில் 21 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 72 எப்-15 ரக விமானங்களைக் கத்தாருக்கு அமெரிக்கா விற்பனைசெய்துள்ளது.

இதுகுறித்து, பென்டகன் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் ரோஜர் கேபினெஸ் கூறுகையில், 'கத்தார் நாட்டுடன் அமெரிக்கா நட்புறவுகொண்டிருக்கிறது. அந்த நாட்டின் பாதுகாப்பு கருதியும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எப்-15 ரக போர் விமானங்களை வழங்குகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் சவுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சவுதி அரேபியாவுக்கு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்.


தற்போது சவுதி உள்ளிட்ட நாடுகள், கத்தாருடன் அனைத்துவிதமான உறவையும் முறித்துக்கொண்டுள்ளன. இந்த நிலையிலும் அமெரிக்கா கத்தார் நாட்டுக்குப் போர் விமானங்களை விற்பது, 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பது போலத்தான் இருக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top