Mohammed Farook Mohammed Farook Author
Title: போதும் நிறுத்துங்கள்..! கொந்தளிக்கும் ட்ரம்ப்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளிடமிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கருத்தை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார். த...
வளைகுடா நாடுகளிடமிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கருத்தை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார் நாடு வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்துள்ளன. வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ‘தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது கத்தார். இதுகுறித்து அண்டை நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கத்தார் நடவடிக்கையின் மீது தீவிர கண்டனங்களைப் பதிவு செய்யவுள்ளோம்’ என்றார்.

இவ்விவகாரம் குறித்து ட்ரம்ப் மேலும் கூறுகையில், ‘முதலில் தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள். வெறுப்பை போதிப்பதை நிறுத்துங்கள். படுகொலைகளை நிறுத்துங்கள். எந்தவொரு நாட்டையும் நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. உலக நாடுகளுக்கான பொது அறிவிப்பாக எடுத்துக்கொண்டு பிரச்னைகளை இணைந்து களைவோம்’ என ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top