"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/6/17

லண்டனில் மசூதி அருகே வேன் மோதித் தாக்குதல்: ஒருவர் பலி; பலர் காயம் - தீவிரவாதிகள் சதியா?

லண்டனில், மசூதிக்கு அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

லண்டன் ’செவன் சிஸ்டர்ஸ்’ சாலையில், பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 12.20 மணி அளவில் மசூதிக்கு அருகே நடைபாதையில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி, பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. மசூதிக்கு அருகே ரமலான் நோன்பை நிறைவுசெய்துவிட்டு வெளியில் வந்தவர்கள் மீது அந்த வேன் மோதியுள்ளது. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது போல  இருப்பதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியளித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்தோர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை பெரும் விபத்தாகவே கருதுவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கோர விபத்துக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.

லண்டனில் ரமலான் நோன்பை நிறைவு செய்துவிட்டு வெளியில் வந்தவர்கள் மீது வேன் மோதித் தாக்குதல்!

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.