"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/6/17

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று முதல் சஹர் உணவு உட்கொண்டு நோன்பு வைத்த உன்னத நிகழ்வு.... இதுப்போல் தொடர்ச்சியாக சில நாட்கள் நோன்பிருக்க போவதாக கூறியுள்ளார். பொதுவாக அரசியல் வாதிகளை பொறுத்த வரை நோன்பு நோற்காமலேயே இஃப்தார் என்னும் புனித நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்தி இஃப்தாரின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள்.

நோன்பு வைக்காமலேயே இஃப்தாரில் கலந்து கொள்வது நோன்பாளியின் புனிதத்தையும், நோன்பின் மாண்பையும் கெடுப்பதற்கு சமம், அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் மிகவும் மாறுதலாக நானும் உங்களுடன் நோன்பு நோற்கிறேன் என்று அதிகாலை 3 மணிக்கு சஹர் உணவு உட்கொண்டு முழுமையாக நோன்பு நோற்கும் உன்னத மனிதர் திருமாவளவன், இந்த ஆண்டு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக திருமாவளவன் நோன்பு நோற்று வருகிறார். சாதிய மதவாத சக்திகள் பார்த்திருந்தால் நிச்சயமாக எண்ணியிருப்பார்கள் சாதி செத்து விட்டதோ சமத்துவம் வென்று விட்டதோ என்று.....

  
  
  

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.