"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/6/17

கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதற்கு அந்நாட்டின் மீது சவூதி அரேபியா மற்றும் ஏனைய அரபு நாடுகள் விதித்த நிபந்தனைகள் குறித்து எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அதல் அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கு பதிலளித்திருக்கும் கத்தார் தன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் நாட்டின் இறைமையை கட்டுப்படுத்தும் முயற்சி என்று கட்டார் முன்னதாக கூறியிருந்தது.

வொஷிங்டன் சென்றிருக்கும் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜுபைரிடம் இந்த நிபந்தனைகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார்.“நாம் எமது நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறோம். தற்போது கட்டார் தனது நடத்தையை திருத்திக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அப்படி செய்யாவிட்டால் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று ஜுபைர் குறிப்பிட்டார்.

கட்டார் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலுக்கு திரும்ப வேண்டுமானால் “என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்” என்றும் ஜுபைர் கூறினார்.சவூதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சியம் பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் மூன்று வாரத்திற்கு முன் கட்டாரை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமுல்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு உதவுவதாக கட்டார் மீது குற்றம் சாட்டிய இந்த நாடுகள் டொஹாவில் இருக்கும் துருக்கிய இராணுவ தளத்தை மூட வேண்டும் அல் ஜஸீரா தொலைக்காட்சி சேவையை மூடவேண்டும் மற்றும் ஈரானுடனான உறவை குறைக்க வேண்டும் போன்ற அசாதாரண நிபந்தனைகளை விதித்தன.

இந்நிலையில் அமெரிக்கா விஜயம் மேற்கொண்ட கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸனை சந்தித்தார்.

இந்நிலையில் ஜுபைரின் கருத்துக்கு அல்தானி அல் ஜெஸீராவுக்கு பதிலளித்தபோது அந்த நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனைகளுக்கு பதில் ஆதாரங்களையே முன்வைத்திருக்க வேண்டும் என்றார்.

“நிபந்தனைகள் யதார்த்தமாகவும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவைகளை ஏற்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயாரென நாம் வொஷிங்டனுடன் உடன்பட்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.நிபந்தனைகள் நியாயமானதும் செயற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என தான் நம்புவதாக டில்லர்ஸன் குறிப்பிட்டார்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.