Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து தமிழக வணிகர்கள் போராட்ட அறிவிப்பு! மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து, தமிழகம் முழுவதும் நாள...
ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து தமிழக வணிகர்கள் போராட்ட அறிவிப்பு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து, தமிழகம் முழுவதும் நாளை வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். "மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நள்ளிரவில் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அன்னிய வரி திணிப்பு எனவும், வரியை குறைக்க வேண்டும் என போராடுவதை தவிர்த்துவிட்டு, வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் எனவும் வெள்ளையன் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் ஆன்லைன் வர்த்தகம் செழித்தோங்கும் என்று குறிப்பிட்ட வெள்ளையன், சில்லறை வணிகர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாட்டில் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதுடன், அனைத்து துறைகளும் அன்னியர்களின் கையில் போய்விடும் அபாயம் உள்ளதாகவும், இறுதியாக சுதந்திரத்திற்க்கே கேடு வந்துவிடும்  என்றும் வெள்ளையன் எச்சரித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top