Mohammed Farook Mohammed Farook Author
Title: பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்களை கழிவறையைச் சுத்தப்படுத்தவைத்த கைதிகள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. லண்டன...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. லண்டனில், அதே தினத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியை இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த தருணத்தில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள, பர்ஹன்பூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரவுக் கோஷங்களையும் எழுப்பியிருக்கின்றனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்களை மத்தியப்பிரதேச போலீஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்தது. ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் மீது பதியப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும், கந்த்வா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குச் சென்றவர்களுக்கு வேறுவிதமான அனுபவம் கிடைத்தது. சிறையில் இருந்த சீனியர் கைதிகள், இவர்கள் ஒவ்வொருவருக்கும் கன்னத்தில் ஒரு அறை கொடுத்துள்ளனர். அத்துடன், கழிவறை, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யுமாறும் கூறியிருக்கின்றனர். தற்போது நீதிமன்றம் இவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்துள்ள  மன்சூரி என்பவர் கூறுகையில், ' நான் பட்டதாரி. போலீஸ் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். தற்போது, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் என் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது'' என்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top