"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/6/17

அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவி ஒருவரை கையில் விலங்கு மாட்டி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ரோஸ்மவுண்ட் வெலி உயர்நிலை பள்ளியில் பயின்று வரும் இஸ்லாமிய சிறுமி ஒருவருக்கும் வகுப்பு தோழன் ஒருவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் அச்சிறுவன் அந்த சிறுமியை பார்த்து தீவிரவாதி என்று கத்தியுள்ளான். இதில் வகுப்புக்கு வந்த பாதுகாப்பு அதிகாரி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுமியின் கையில் விலங்கு மாட்டி அவர் தலையில் அணிந்திருந்த ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சிறுமி கூச்சலிட்டுள்ளார் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய பின் விடுவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.