Mohammed Farook Mohammed Farook Author
Title: விரைவில் வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்...
புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும், கடந்தாண்டு இறுதியிலும், ஜனவரி மாதத்திலும் கடுமையான சில்லறைப் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும், தற்போது அதனை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய 200 ரூபாய் நோட்டுகளின் படம் எனக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் படம் வேகமாக பரவி வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top