"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/5/17

அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் கிளையில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் நோன்பு திறப்பதற்க்கும் (இஃப்தார்) மாலையில் நோன்பு கஞ்சி விநியோகிக்கவும் (கஞ்சி வகைக்காக) ரூபாய் 2300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வடை, பஜ்ஜி வகைக்காக ரூபாய் 300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோன்பு கஞ்சி, வடை, பஜ்ஜி போன்றவற்றை கொடுக்க விரும்பினால் கீழே உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொண்டு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் நன்மையை நாடி உங்களால் முடிந்த தொகையை கொடுக்க விரும்பினாலும் கொடுக்கலாம்.

SK. முஹம்மது    +91 78454 84443.
A. சல்மான்             +91 88703 29585.
A. சல்மான் ரசூல் +91 97918 51551.

இன்ஷா அல்லாஹ் புனித ரமலான் மாதம் தொடங்க இருப்பதால் சுன்னத்தான இரவு தொழுகை (தராவீஹ்) இஷா தொழுகையுடன் நமது பள்ளிவாசலில் தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தினமும் மார்க்க சொற்பொழிவும் நடைபெறும். பெண்கள் தொழுவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு:- TNTJ பள்ளிவாசல் நிர்வாகம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.